மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)
Tuesday, May 25, 2010
கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)
Posted by ADMINதனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
Posted by ADMINஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
* தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
* சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)
Monday, May 24, 2010
பாண் அட்டை. (PAN Card)
Posted by ADMIN
பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம்.
பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)
- வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.
- டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.
சரி ! டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (How to open Demat Account)
Posted by ADMIN- ஏதேனுமொரு அடையாள அட்டை (Identity card). உதாரணத்திற்கு வாக்காளர் அடையாள (Voters ID-card) அட்டை, ஓட்டுனர் உரிமம் (Driver License) போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை பயன்படுத்தலாம் (Ration card).
- பாண் அட்டை. (PAN Card)
டிமேட் கணக்கின் பயன்பாடுகள் யாவை? (Use of Demat)
Posted by ADMINமேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ விற்கவோ முடியும். இக்கணக்கால்,
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.
- விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)
டிமேட் கணக்கின் பயன்பாடுகள் யாவை? (Use of Demat)
Posted by ADMINமேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ விற்கவோ முடியும். இக்கணக்கால்,
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.
- விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)
டிமேட் கணக்கு என்றால் என்ன ? (What is meant by Demat Account)
Posted by ADMINவங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வது போல (As like savings account), இதற்கு என்றே இருக்கும் சில நிறுவனங்களிடம் நாம் கணக்கை தொடங்க வேண்டும். அவர்கள் நமக்கு, வங்கி கணக்கெண் போல புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Identity card with photograph) எண் கொடுத்துவிடுவார்கள்.
ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் யாவை ? (Advantages of Online Trading)
Posted by ADMINஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (Online Trading)
Posted by ADMINஆன்லைன் வர்த்தகம், சமீபகாலத்தில் புகழ்ப்பெற்ற வர்தக முறை ஆகும். இம்முறையால் வர்த்தகம் செய்வதற்க்கு, நீங்கள் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பங்குத்தரகரை அனுகாமல், நாம் இணையதளத்தின் (Internet) மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்க்கவோ முடியும்.
நாம் இணையதளத்தில் வர்த்தகம் செய்யும்பொழுது, ஆன்லைன் பங்குத்தர்கரை (Online Stock Broker) தொடர்பு கொள்வோம். ஆன்லைன் பங்குத்தரகர் நம் சார்பாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வார். இதனால் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Brokerage fees) செலுத்த வேண்டும்.
பங்கு தரகர்கள் (STOCK BROKERS)
Posted by ADMINபங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.
பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?
Posted by ADMINஇல்லை. பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேராக செல்ல வேண்டியதில்லை. இவ்வர்த்தகம் செய்வதற்க்கென்றே பங்குச்சந்தையால் உரிமம் வழங்கப்பெற்ற பங்குத்தரகர்கள் (Stock Brokers) மூலமாக டிரேடிங் (Trading) செய்யலாம். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் (Investor) பங்குதரகரிடம் ஒரு கணக்கை (Account) தொடங்க வேண்டும்.
தேசிய பங்குச்சந்தை மும்பையில் நிருவப்பட்டது. இது நிஃப்டி (Nifty) என்னும் அளவுகோலால் (Benchmark) கணக்கிடப்படுகிறது. நிஃப்டி, பங்குச்சந்தையில் நன்றாக லாபம் கொழித்து கொண்டிருக்கும் முதல் ஐம்பது (50) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் நிஃப்டி-ஐம்பது (Nifty-50) என்றும் அழைக்கப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை (Trading) தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.
இது சென்செக்ஸ் (SENSEX) என்ப்படும் அளவுகோலால் (Benchmark) 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising) நன்றாக உள்ளதாகவும், குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும்.
சென்செக்ஸ் (SENSEX) பங்குச்சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் முதல் முப்பது (30) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி-முப்பது (BSE-30) என்றும் அழைக்கப்படுகிறது.
பி.எஸ்.சி (BSE) சென்செக்ஸ்யை தவிர மற்ற புகழ்பெற்ற பங்கு குறியீடுகள்,
- BSE 500
- BSE 100
- BSE 200
- BSE PSU
- BSE MIDCAP
- BSE SMLCAP
- BSE BANKEX
- BSE Teck
- BSE Auto
- BSE Pharma
- BSE Fast Moving Consumer Goods (FMCG)
- BSE Consumer Durables
- BSE Metal
பி.எஸ்.சி பரப்பல் (BSE Broadcast)
பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின் (Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTV தொலைக்காட்சியிலும் காணலாம்.பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where should I trade stocks?)
Posted by ADMIN
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். உலகளவில் (Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.
பி.எஸ்.சி பரப்பல் (BSE Broadcast)
பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின் (Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTV தொலைக்காட்சியிலும் காணலாம்.
டிரேடிங் (Trading) என்றால் என்ன ?
Posted by ADMINபங்கு வர்த்தகம் (டிரேடிங் - Trading)
Posted by ADMIN- வர்த்தகம் என்றால் என்ன ? (Trading)
- பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where to trade?)
- பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?
- ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (Online Trading)
- ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் யாவை ? (Advantages of Online Trading)
- டிமேட் கணக்கு என்றால் என்ன ? (What is meant by Demat Account)
- டிமேட் கணக்கின் பயன்பாடுகள் யாவை? (Use of Demat)
- சரி ! டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (How to open Demat Account)
Under Subscribed ? (What is meant by Under-subscribed?)
Posted by ADMINஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகதற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அது அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள். செ.பி-யின் (According SEBI rules) விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.
Over Subscribed (What is meant by over subscribed?)
Posted by ADMINஉதாரணமாக ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) நிறுவனம் ஐந்தாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் (Issues stock) வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனம் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாகும். அப்படியொரு நிறுவனம் புதிய பங்குகள் வெளியிடுகிறார்கள் என்றால், அதை வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்படும். நீ-நான் என்று நிறைய பேர் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்க விண்ணப்பிப்பார்கள். இப்பொழுது ஐந்தாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிட்ட ஐ.சி.ஐ.சி.ஐ-க்கு ஒன்பாதாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது என்றால், அதை ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed) என்பார்கள்.
அது எப்படி என்கிறீர்களா ?. இப்படிப்பட்ட பெரிய, லாபம் கொழிக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிடுகிறாகள் என்றால், சும்மாவா?… நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள் ஏராளம்.சேர்அலாட்மெண்ட்என்றால்என்ன?
Posted by ADMINஅலாட்மெண்ட் என்றால் என்ன? (What is meant by Allotment?)
உதாரணத்திற்கு இன்போஸிஸ் நிறுவனம் (Infosys Technologies) ஏழாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் (Issues stocks) என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான செய்தி வெளியானதும், பங்குகளை (shares) வாங்க நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். சிலர் நூறு பங்குகள் வேண்டியும், சிலர் ஆயிரம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்து குவியும். அதுவும் இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனம் என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படி கோரப்பட்ட பங்குகளின் மதிப்பு ஏழாயிரம் கோடிக்கு மேல் குவிந்துள்ளது என்றால் பங்குகளை அலாட்மெண்ட் முறையில் ஒதுக்குவார்கள். ஆதாவது ஒருவர் நூறு பங்குகள் கோரினால் நூறுமே கிடைக்காது, ஐம்பது கிடைக்கலாம், இருபது பங்குகள் கிடைக்கலாம். ஏன் சில நேரங்களில் கிடைக்காமலே கூட போகலாம். இவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளை அலாட்மெண்ட் எனபார்கள்.
நான் சமீபத்தில் வெளியான ரிலையன்ஸ் பவர் (Reliance Power) பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தேன். என்னைப்போல் நிறைய பேர் ஆர்வமான விண்ணப்பித்தார்கள். இறுதியில் ரிலையன்ஸ் பங்குகள் எனக்கு கிடைக்க வில்லை.
Prospectus என்றால்என்ன?
Posted by ADMINஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடும் முன் prospectus தயார் செய்ய வேண்டும். அதில் கீழ் காணும் விவரங்களை விளக்கப்பட்டிருக்க வேண்டும்,
- வெளியிடப்படும் பங்களைப்பற்றி முழு விவரம். (Details of share)
- திரட்ட படும் பணத்தின் மூலம் என்ன வியாபாரம் செய்வார்கள்.
- அதன் மூலம் அவர்கள் பெற நினைக்கும் லாபம்.
- லாபத்தை பகிர்ந்து எவ்வளவு டிவிடண்ட் தருவார்கள். (What is the dividend?)
- கடந்த காலத்தில் எவ்வளவு டிவிடண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
- போனஸ் பங்குகள் கொடுத்திருக்கிறர்களா. (Bonus share)
சரி அதனால் முதலீட்டாளருக்கு என்ன பயன் என்கிறீர்களா?… சரியான கேள்விதான்…. ஒரு முதலீட்டாளர் எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்வதற்கு முன் இவ்வறான prospectus படித்து தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா?, டிவிடண்ட் கிடைக்குமா?, போனஸ் பங்குகள் கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்கு prospectus ஓரளவுக்கு பதில் சொல்லி விடும். கவனம், சில நேரங்களில் நட்டமும் ஏற்ப்படலாம், அது சந்தையின் நிலவரத்தை பொறுத்து மாறுபடும். Prospectus தயார் செய்வதற்கு சில விதி முறைகள் உள்ளது. இவ்விதி முறைகளை செ.பி (SEBI) வகுத்துள்ளார்கள்.
With-Premium என்றால்என்ன?
Posted by ADMINவித்-பிரிமியம் என்றால் என்ன ? (What is meant by With-Premium?)
உதாரணத்திற்கு இன்போஸிஸ் (Infosys) நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். அது மட்டுமில்ல லாபம் கொழிக்கும் நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிபட்ட நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. நீ-நான் என்று போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் பத்து ருபாய் பங்குக்கு ஆயிரம் ருபாய் அதிக விலை (Rs. 1000 more) வைத்து விற்பார்கள். அதாவது ஆயிரத்து பத்து ருபாய் (Rs 10+1000=1010) என்று. இதை வித்-பிரிமியம் (With-Premium) என்பார்கள்.பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
Posted by ADMINபங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.முகப்புவிலைஎன்றால்என்ன?
Posted by ADMINமுகப்பு விலை என்றால் என்ன? (What is meant by Face Value?)
IPO என்றால் என்ன என்பதை பார்த்தோம். இதில், ஒரு நிறுவனம் முதன் முதலாக பங்குகளை வெளியிடும்பொழுது அதற்கு முகப்பு விலை ஒன்றை நிர்ணயித்து வெளியிடுவார்கள்.
உதாரணத்திற்கு, போக்கஸ் (Focus) என்ற நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம் (நினைவில் இருக்கட்டும், இது உதாரணமே !). இந்நிறுவனத்தை நடத்த அவர்களுக்கு பணம் தேவை. அதை திரட்ட புதிய பங்குகளை (Shares) வெளியிடுவார்கள். அவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு முகப்பு விலையை நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள், ஒரு பங்குகின் விலை ருபாய் பத்து (Rs. 10) என்று. அதாவது பத்து பங்குகள் வாங்கினால் நூறு ருபாய். இதை சந்தையில் யார் வேண்டுமானலும் வாங்கிக்கொள்ளலாம். அதென்ன பத்து ருபாய் பங்கு என்று உங்களுக்கு தோன்றுமே !.. அதையும் பார்ப்போம்.
மேலே கூறப்பட்ட போக்கஸ் என்பது மிக சிறிய நிறுவனம். அந்நிறுவனம் பங்குகள் வெளியிடும்பொழுது, ஒரு பங்கின் விலை பத்து ருபாய் என்று சிறிய தொகையை நிர்ணயம் செய்வார்கள். ஏனென்றால் அந்நிறுவனத்தை நம்பி யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அது போலதான் நிறைய சிறு நிறுவனங்கள் குறைந்த விலையில் பங்குகளை வெளியிடுவார்கள்.