Monday, May 24, 2010

கேபிடல் (capital) என்றால் என்ன ?

இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பங்குச்சந்தையை பற்றி போதிய தெளிவுயின்மையே காரணம். சரி, அப்படி என்னதான் அதில் இருக்கிறது?… சற்று உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள்.

பங்கு சந்தையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விசயங்கள்

நீங்கள் தொடங்கும் ஒரு தொழிலுக்கு (Business) தேவைப்படும் முதலே கேப்பிட்டல் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மளிகைக்கடை வியாபாரம் ஆரம்பித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவ்வியாபாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், கடை அமைப்பதற்க்கான இடம், போக்குவரத்து போன்றவற்றிக்காக செலவிடும் தொகையே கேப்பிட்டல் ஆகும்.

All the money that you invest to start a business is called as capital.

pangusanthai © 2008 Por *Templates para Você*