Monday, May 24, 2010

சேர்அலாட்மெண்ட்என்றால்என்ன?

அலாட்மெண்ட் என்றால் என்ன? (What is meant by Allotment?)

உதாரணத்திற்கு இன்போஸிஸ் நிறுவனம் (Infosys Technologies) ஏழாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் (Issues stocks) என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான செய்தி வெளியானதும், பங்குகளை (shares) வாங்க நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். சிலர் நூறு பங்குகள் வேண்டியும், சிலர் ஆயிரம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்து குவியும். அதுவும் இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனம் என்றால் சொல்லவா வேண்டும்.

அப்படி கோரப்பட்ட பங்குகளின் மதிப்பு ஏழாயிரம் கோடிக்கு மேல் குவிந்துள்ளது என்றால் பங்குகளை அலாட்மெண்ட் முறையில் ஒதுக்குவார்கள். ஆதாவது ஒருவர் நூறு பங்குகள் கோரினால் நூறுமே கிடைக்காது, ஐம்பது கிடைக்கலாம், இருபது பங்குகள் கிடைக்கலாம். ஏன் சில நேரங்களில் கிடைக்காமலே கூட போகலாம். இவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளை அலாட்மெண்ட் எனபார்கள்.

நான் சமீபத்தில் வெளியான ரிலையன்ஸ் பவர் (Reliance Power) பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தேன். என்னைப்போல் நிறைய பேர் ஆர்வமான விண்ணப்பித்தார்கள். இறுதியில் ரிலையன்ஸ் பங்குகள் எனக்கு கிடைக்க வில்லை.

0 comments:

pangusanthai © 2008 Por *Templates para Você*